பழங்கால விளையாட்டுகள்

ஓடியாடி கூடி விளையாடும் பாரம்பரிய குழு விளையாட்டுகள் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மை முதலியவற்றை சிறுவர்கள் மத்தியில் உருவாக்கும். அத்தகைய விளையாட்டுகளில் கில்லி, பம்பரம், தாயம், பல்லாங்குழி, சிலம்பம், பச்சைக்குதிரை, நொண்டி, நாடு பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகின்றன. தற்போதுள்ள தலைமுறையினர் இந்தப் பெயர்களைக் கேட்டிருக்கக் கூட வாய்ப்பு இல்லை.


விளையாட்டுகள்


    பழங்காலத்தில் சிறுவர்களுக்கு மரங்கொத்தி, காயா? பழமா?, உப்பு விளையாட்டு, ஐந்து பந்து என 65 விளையாட்டுகள் இருந்தன.


   இதே போல சிறுமியர்களுக்கு ஒண்ணாங்கிளி இரண்டாம்கிளி, பருப்புசட்டி, கண்கட்டி, அக்கா கிளி செத்து போச்சு, மோருவிளையாட்டு, கரகர வண்டி, கும்மி, சோற்றுபானை என 27 விளையாட்டுகளும், சிறுவர் சிறுமியர் இருவரும் சேர்ந்து விளையாடும் வகையில் தொட்டுவிளையாட்டு, குரங்கு விளையாட்டு, கண்ணா மூச்சி, நொண்டி, குலைகுலையாய் முந்திரிக்காய் போன்ற 30 விளையாட்டுகளும், ஆண்கள் மட்டும் விளையாடும் வகையில் ஜல்லிகட்டு, வாடிவாசல், சிலம்பம், பரிவேட்டை, சடுகுடு, புலிவேடம், பானை உடைத்தல் போன்ற 30 விளையாட்டுகளும், குழந்தைகளுக்கு என்று தென்னைமர விளையாட்டு, பருப்புகடைந்து, சீப்பு விற்கிறது என 5 விளையாட்டுகள் இருந்தன. தமிழர்கள் நாம் கண்டுபிடித்த விளையாட்டுகள் அனைத்தும் நமது உடல், மனம், சிந்தனை, மொழி, கலாச்சாரம், பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கை முறை, விடாமுயற்சி என்று ஏதேனும் ஒரு வகையில் நம் மனதிற்கும், உடலிற்கும் நன்மைகளை வழங்கக் கூடிய விளையாட்டாகவே இருந்து வந்தது.



பம்பரம் விடுதல் இந்த பம்பர விளையாட்டிற்கு இத்தனை பேர்தான் விளையாட வேண்டும் என்று வரைமுறையில்லை. இதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். முதலில் ஒரு வட்டம் போட்டுக் கொள்ள வேண்டும். அந்த வட்டத்தைச் சுற்றி நின்று பம்பரத்தையும் சாட்டையையும் சுற்றுவதற்காகத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கும் பின் அனைவரும் பம்பரத்தைச் சாட்டையால் சுற்றிக் கொண்டு வட்டத்திற்குள் பம்பரத்தை சுழலவிட வேண்டும்.


பின்பு சாட்டையைப் பயன்படுத்தி பம்பரக்கட்டையை மேல் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்க முடியாதவர்களின் பம்பரங்களை வட்டத்தின் உள்ளே வைக்க வேண்டும். வெளியே உள்ளவர்கள் வட்டத்திலிருக்கும் பம்பரத்தை, தங்கள் பம்பரத்தைப் பயன்படுத்தி வெளியே எடுக்க வேண்டும். அவ்வாறு பம்பரத்தை வட்டத்தினுள் விடும்போது, பம்பரம் இல்லாதவர் அந்தப் பம்பரத்தை பிடித்துவிட்டால் அந்தப் பம்பரமும் வட்டத்தினுள் வந்துவிடும். சுழற்றுபவரின் பம்பரம் சுழலவில்லை எனில், அந்தப் பம்பரமும் வட்டத்தினுள் வைக்கப்படும். வட்டத்தில் உள்ள அனைத்துப் பம்பரங்களும் வெளியே வந்து விட்டால் மீண்டும் ஆட்டத்தைத் துவங்க வேண்டும்.


ஆடு புலி ஆட்டம்


ஆடு புலி ஆட்டம் என்பது திண்ணை வியூகது. ஆடு புலி டும் புலி ஆட்டம் விளையாட்டு ஆகும். இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப் படுகிறது. ஊர்புறங்களில் தரையில் இந்தக் கட்டங்களை சுண்ணாம்புக் கட்டி அல்லது சாக் பயன்படுத்தி வரைந்து கொள்வார்கள். புளியங்கொட்டைகள், கற்கள், மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்களை அதில் நகர்த்தி விளையாடப் படுகிறது. ஆடு புலி ஆட்டத்தை வெட்டும் புலி ஆட்டம் என்றும் கூறுவர். இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டு.


 ஆடு புலி ஆட்டக்கோடு விளையாடுவதற்கு தேர்ந்தெடுத்த பகுதியில் முக்கோணக் கூம்புக் கோடு ஒன்றை வரைந்து, கூம்பின் உச்சியிலிருந்து அடிக்கோட்டை உள்ளே தொடும் மேலும் இரண்டு கோடுகள். இந்தக் கோடுகளை வெட்டும்படி போட்ட 3 கிடைக்கோடுகள். கிடைக்கோடுகளின் முனைகள் இருபுறமும் குத்துக் கோடுகளால் இணைக்கப்பட்டிருக்கும்.


மெல்ல வந்து கிள்ளிப்போ


   2 அணியினர் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். 1. இரு அணித் தலைவர்களும் தங்கள் அணியினருக்கு ஒவ்வொரு பெயர் வைப்பார்கள். பழத்தின் பெயர், பூவின் பெயர், சினிமாவின் பெயர் என எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். பின்னர் எதிர் அணியில் உள்ள ஒருவரின் கண்களை இறுக மூடிக்கொண்டு தம் அணிக்கு வைத்த ஒரு பெயரைச் சொல்லி அழைப்பார் (உதாரணத்துக்கு 'ரோஜாப்பூவே ரோஜாப்பூவே மெல்ல வந்து கிள்ளிப்போ').


ரோஜாப்பூ சத்தமில்லாமல் வந்து கிள்ளிவிட்டு சாதாரணமாக அமர்ந்து விடும். பின், எல்லோரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க என்று ஆணையிடுவார். எல்லோரும் கீழே குனிந்து கொள்வார்கள். அதன் பிறகு கண்களை திறந்து விடுவார். இப்போது கிள்ளு வாங்கியவர் ரோஜாப்பூ யாரென கண்டுபிடிக்க வேண்டும்!


காக்காய் குஞ்சு


“காக்காய் குஞ்சுக்குக் கல்யாணம்


காவடி ஆட்டம் தேரோட்டம்


நாலு கரண்டி நல்லெண்ணெய்


ஐந்து குமர்


நாற்பதெட்டுத் தீபாவளி


   வாரார் போரார் சுப்பையா வழியை விளக்கடி மீனாட்சி" காக்கா குஞ்சு பாடல் பாடிக்கொண்டு விளையாடும் விளையாட்டு இது. ஐந்து குழந்தைகள் சேர்ந்து விளையாடுவார்கள் ஒரு குழந்தையை ஒருவரின் மடியில் குப்புறப் படுக்கச் செய்து அவரது முதுகில் மற்ற குழந்தைகள் கைகளை வைத்துக்கொண்டு காக்கா குஞ்சுக் கல்யாணம் என்று பாட்டு பாடிக் கொண்டே ஒரு மறைபொருளை ஒருவரிடம் கொடுத்து விடுவர். படுத்திருக்கும் குழந்தை எழுந்து எந்த குழந்தையிடம் மறைபொருள் உள்ளது என்பதை அவர்களின் முக பாவனையை வைத்துக் கண்டுபிடிக்க வேண்டும் இது குழந்தையின் அறிவுத்திறனுக்கு விடும் சவாலாகும். சரியாகச் சொல்லிவிட்டால் மறைபொருளை வைத்திருந்த குழந்தை மீண்டும் படுக்க வேண்டும்.


அலப்பறிக்க வருகிற ணோம் வ .. பூப்பறிக்க வருகிறோம் 2 குழுவினர் எதிரெதிர் திசையில் நிற்பார்கள். ஒருவரோடு ஒருவர் கைகோர்த்தபடி எதிர் அணியினரை நோக்கி குதித்தபடி பாட்டு பாடி வருவார்கள். இரு அணியிலும் சமமான பிள்ளைகள் இருக்க வேண்டும். 'பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம் எந்த மாதம் வருகிறீர் வருகிறீர் டிசம்பர் மாதம் வருகிறோம் வருகிறோம் யாரைத் தேடி வருகிறீர் பூவைத் தேடி வருகிறோம் எந்தப் பூவை தேடுவீர் மல்லிகையைத் தேடுவோம்' இப்படி பாடியதும் 'மல்லிகை' என்று பெயர் வைத்த பெண்ணைப் பிடித்து இழுப்பார்கள். அந்த பெண் அந்தப் பக்கம் சென்றுவிடாமல் இந்த அணி இழுக்க, ஒரே களேபரம்தான்!


கள்ளன் வாரான் கண்டுபுடி


மொத்த பிள்ளைகளில் பெரியவர்களாக இருவர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் தான் விளையாடப்போகும் வீரர்கள். மற்ற அனைவரும் ஒரே வரிசையில் கீழே சம்மணமிட்டு அமர்ந்து கொள்வார்கள். எல்லோரும் கைகளை பின்னால் வைத்திருப்பார்கள். வீரர்களில் ஒருவர் முன்னால் நிற்பார். மற்றவர், கையில் ஒரு கல்லை எடுத்துக்கொண்டு,


'காயே கடுப்பங்கா


கஞ்சி ஊத்தி நெல்லிக்கா


உப்பே புளியங்கா


ஊறவச்ச நெல்லிக்கா


கள்ளன் வாரான் காரைக்குடி


கல்லை நீயும் கண்டுபிடி'


என்று பாடியபடி ஒவ்வொருவருடைய கையிலும் கல்லை வைப்பது போல போக்கு காட்டி யாராவது ஒருவரின் கையில் வைத்து விடுவார். வைத்தபின் எல்லாரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க என்பார். எல்லோரும் குனிந்து கொள்ள, யாருடைய கையில் கல் இருக்கிறது என்பதை எதிரில் நிற்பவர் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்லை வைத்தவருக்கு ஒரு மதிப்பெண்.


களற்சுக்கல்.....


இது பெண் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகள் ஆகும். ஐந்து வயதில் ஆடத் தொடங்கும் விளையாட்டு அவர்கள் திருமணம் முடிக்கும் வரை இந்த விளையாட்டுகளை கிராமிய பெண்கள் விளையாடுவார்கள்.


இது உத்திக்கல் விளையாட்டு, ஏழுகல் விளையாட்டு என இருவகைப்படும்.இந்தக் கூழாங்கற்கள் விளையாட விளையாட மிகுந்த வழுவழுப்பான தோற்றம் பெறும். ஒவ்வொரு வீடுகளிலும் ஒரு பாத்திரத்தில் குழந்தைகள் இந்த கற்களை சேமித்து வைத்திருக்கும். உத்திகள் விளையாட எவ்வளவு கற்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ள லாம். குறைந்தது ஆயிரம் கற்களாவது தேவைப்படும். கல் விளையாட்டிற்கு அழகான நாட்டுப்புறப் பாடல்களும் உண்டு.


ஏழு கல் விளையாட்டிற்கான நாட்டுப்புறப் பாடல் ஒன்றை இங்கே தருகிறேன்.


ஏழு கல்


இவ் விளையாட்டு விளையாட இரண்டு சிறுமிகள் போதும். ஏழு கற்கள் வேண்டும். ஒன்றிலிருந்து 10 வரை விளையாடுவார்கள்.


ஒன்றாம் முறையில் ஒவ்வொரு கல்லையும் மேலே ஒரு கல்லைப் போட்டுக் கொண்டு மீதி ஆறுகளையும் தனித்தனியாக ஒவ்வொரு கல்லாக அடுத்த கல்லில் விரல் படாது மேலே போயிருக்கும் கல் கீழே வருவதற்குள் எடுத்துக்கொண்டு அந்த8கல்லை சரியாக பிடிக்க வேண்டும்.


இரண்டாவது ஒரு கல்லை மேலே போட்டுவிட்டு அது கீழே வருவதற்குள் மற்ற கற்களில் விரல் படாது இரண்டிரண்டு கற்களாக எடுக்க வேண்டும். மூன்றாவது மூன்று மூன்று கற்களாக எடுக்க வேண்டும். நான்காவது நான்கும் இரண்டுமாக எடுக்கவேண்டும். ஐந்தாவது ஐந்தும் ஒன்றுமாக எடுக்க வேண்டும். ஆறாவது மூன்று மூன்றாக எடுக்க வேண்டும்.


எட்டாவது இரண்டும் நான்கு மாக எடுக்க வேண்டும். ஒன்பதாவது ஒன்றும் ஐந்துமாக எடுக்க வேண்டும். பத்தாவது ஒரு கல்லை மேலே போட்டுவிட்டு அது கீழே வருவதற்குள் கீழ் இருக்கும் அத்தனை கற்களையும் அள்ளிக் கொண்டு மேலிருந்து வரும் கல்லையும் பிடிக்கவேண்டும். பெண் ஒரு கையாலேயே புறங்கையில் எத்தனை கற்களை கீழே விழாது ஏந்துகின்றோமோ அந்தக் கற்களின் எண்ணிக்கையே வெற்றி..


விளையாட்டிற்கான நாட்டுப்புற பாடல் இதோ...


1. ஒன்னே உறவுல தண்ணீ ர் கரையில தானாய் மணலிலே பிள்ளைக் கொடியில புலம்பித் தவிக்கிறாள்....


2. ஈரிரண்டு எடுக்கவே மாதா ரெண்டு ஜெயிக்கவே....


3 . மூணு பின்னல் ஆடிவர முத்துச்சரம் கூடிவர....


4 . நான்கேவா இந்திராணி நாகமுத்துப் பட்டாணி...


5. அஞ்சலம் குஞ்சலம் தம்பி சிதம்பரம்....


6. ஆறும் கூறும் நாதவரே ஜோதி சொல்ல வந்தவரே....


7. ஏழே எழுதிக்கோ என்பெயரைச்சொல்லிக்கோ தானே எழுதிக்கோ தானைப்பந்தல் போட்டுக்கோ அந்த


8. எட்டும் தட்டும் கொடைபிடிக்க கம்மந் தட்டு கலகலங்க...


9. ஒன்பான் சம்பா கும்பா சம்பா


10. பத்தே பதிச்சிக்கோ


பணத்தை நெறிச்சுக்கோ பதக்கஞ் சங்கிலி வாங்கிக்கோ இந்தப் பாடலும் கைகள் கற்களைப் போடுவதும் எடுப்பதுமாக உள்ள செயல்பாடும் ஒன்றுபோல் வரும். மீண்டும் அடுத்த தொடரில் .